Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

கரோனா நிவாரணப் பணிகளுக்கு நடிகர் அமிதாப் ரூ.15 கோடி உதவி :

கரோனா நிவாரணப் பணிகளில் தனது பங்களிப்பாக ரூ.15 கோடி வரை உதவி செய்துள்ளதாக நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஸ்ரீ குரு தேஜ்பகதூர் கரோனா சிகிச்சை மையத்துக்கு நடிகர் அமிதாப் பச்சன் அண்மையில் 2 கோடி வழங்கினார். இந்நிலையில் கரோனா நிவாரணப் பணிகளில் நடிகர் அமிதாப்பின் பங்களிப்பு குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பியதால், இதுவரை தான் மேற்கொண்ட மனிதாபிமான உதவிகளை அமிதாப் நேற்று முன்தினம் பட்டியலிட்டார்.

அவர் தனது பதிவில், கரோனா பேரிடர் காலத்தில் எனது தொண்டு முயற்சிகளை வெளிப்படையாக பேசுவதில் மிகவும் சங்கமாக உணர்கிறேன். என்றாலும் நீண்ட காலமாக நானும் எனது குடும்பத்தினரும் ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டு வரும் வெறுக்கத்தக்க விமர்சனங்கள் காரணமாக இதனை பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அமிதாப் நேற்று வெளியிட்ட பதிவில், “கரோனாவுக்கு எதிரான போரில் பலரும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வருகின்றனர். டெல்லியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு நான் ரூ.2 கோடி வழங்கியதை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. என்றாலும் கரோனா நிவாரணப் பணிகளில் எனது பங்களிப்பாக ரூ.15 கோடி வரை உதவி செய்துள்ளேன்.

இதுபோன்ற புள்ளிவிவரங்கள் நிச்சயமாக எனது வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டவை. நான் உழைக்கிறேன். எனது வருவாயில் தேவைப்படுவோருக்கு உதவி செய்கிறேன். கடவுளின் கருணையால் இது சாத்தியமானது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x