ஒலிம்பிக் போட்டிக்கு சீமா பிஸ்லா தகுதி :

ஒலிம்பிக் போட்டிக்கு  சீமா பிஸ்லா தகுதி :
Updated on
1 min read

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனையான சீமா பிஸ்லா தகுதி பெற்றுள்ளார்.

பல்கேரியாவின் சோபியா நகரில் உலக அளவிலான ஒலிம்பிக் தகுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சீமா பிஸ்லா அரை இறுதி சுற்றில் 2-1 என்ற கணக்கில் போலந்தின் அனா லுகாசியாக்கை வீழ்த்தினார்.

இறுதி சுற்றுக்கு முன்னேறிய தன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்றார் சீமா பிஸ்லா. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் 4-வது இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா ஆவார். ஏற்கெனவே வினேஷ் போகத் (53 கிலோ), அன்ஷு மாலிக் (57 கி.), சோனம் மாலிக் (62 கி.) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

ஆடவர் பிரிவில் சுமித் மாலிக் (125 கிலோ), ரவிகுமார் தாகியா (57 கிலோ), பஜ்ரங் புனியா (65 கிலோ), தீபக் புனியா (86 கிலோ) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in