Last Updated : 04 May, 2021 03:13 AM

 

Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

ஏப்

ஏப். 24: கரோனா நோயாளிகளுக்கான அவசர சிகிச்சைக்கு ‘விரஃபின்’ ஊசி மருந்தைப் பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்தது.

ஏப். 24: இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த கே.ஆர்.ஐ. நங்காலா 402 என்கிற நீழ்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் பாலி தீவு அருகே மாயமானது.

ஏப். 24: உச்ச நீதிமன்ற 48-வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பொறுப்பேற்றார்.

ஏப். 24: மின்னணு முறையில் சொத்துக்கான அட்டை வழங்கும் ‘ஸ்வமித்வா யோஜனா’ திட்டம் தொடங்கப்பட்டது.

ஏப். 25: நாடு முழுவதும் புதிதாக 551 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

ஏப்.25: உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம்.சந்தானகவுடர் (62) காலமானார்.

ஏப். 26, 27: ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையையத் திறப்பது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை ஜூலை 31 வரை செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

ஏப்.27: கவுதமாலா உலகக் கோப்பை வில்வித்தை முதல் நிலை போட்டியில் இந்தியாவின் தீபிகாகுமாரி, அதானு தாஸ் ஆகியோர் தங்கம் வென்றனர்.

ஏப். 28: இந்தியாவின் சுவாதி தியாகராஜன் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றிய ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ என்கிற ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது.

ஏப். 29: இந்திய வகையைச் சேர்ந்த பி.1.617 என்ற இருமுறை உருமாறிய கரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏப். 30: தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி. ஆனந்த் (54) காலமானார்.

மே. 2: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின: தமிழ்நாடு - தி.மு.க., கேரளம் - இடது ஜனநாயக முன்னணி , மேற்கு வங்கம் - திரிணமூல் காங்கிரஸ், அஸ்ஸாம் - பா.ஜ.க. கூட்டணி, புதுச்சேரி - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆகியவை ஆட்சியைப் பிடித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x