Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கம் :

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நியூஸிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்ஸன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்ற வார்னர், 2016-ம்ஆண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து அவரது தலைமையில் கடந்த 2017, 2019, 2020 ஆகிய சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு சென்றது ஹைதராபாத் அணி. 2018-ல்தடை காரணமாக வார்னர் விளையாடாததால் கேப்டனாக வில்லியம்ஸன் பொறுப்பேற்று 2-வது இடம் வரை கொண்டு சென்றார். இந்த சீசனில் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி6 ஆட்டங்களில் விளையாடி 5 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x