Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 33, டு பிளெஸ்ஸிஸ் 50, சுரேஷ் ரெய்னா 24, அம்பதி ராயுடு 14 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 28 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய தோனி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
19 ஓவர்களில் சிஎஸ்கே 154 ரன்களே சேர்த்திருந்தது. ஆனால் ஹர்ஷால் படேல் வீசிய கடைசி ஓவரில் ஜடேஜா 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதில் நோபாலில் வீசப்பட்ட சிக்ஸரும் அடங்கும். இதுதவிர 2 ரன்களும், ஒரு பவுண்டரியும் விரட்டினார் ஜடேஜா. இதனால் ஹர்ஷால் படேல் ஓவரில் 37 ரன்கள் விளாசப்பட்டது. இதற்கு முன்னர் கடந்த 2011-ம்ஆண்டு கொச்சி அணிக்கு எதிராக பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில், பரமேஸ்வரன் வீசிய ஓவரில் 37 ரன்கள் விளாசியிருந்தார். இந்த சாதனையை தற்போது சமன் செய்துள்ளார் ஜடேஜா. ஜடேஜா ரன்கள் ஏதும் சேர்க்காத நிலையில் அவர் கொடுத்த கேட்ச்சை டேனியல் கிறிஸ்டியன் தவறவிட்டிருந்தார். இதற்கான பலனை பெங்களூரு அணி அனுபவித்தது.
192 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 122 ரன்களே எடுக்க முடிந்தது. விராட் கோலி 8 ரன்னில் சேம் கரண் பந்திலும், தேவ்தத் படிக்கல் 34 ரன்னில் ஷர்துல் தாக்குர் பந்திலும் நடையை கட்டினர்.தொடர்ந்து கிளென் மேக்ஸ்வெல் (22), வாஷிங்டன் சுந்தர் (7), டி வில்லியர்ஸ் (4) ஆகியோரை தனது சுழலால் வெளியேற்றினார் ஜடேஜா. 83 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த பெங்களூரு அணியால் அதன் பின்னர் மீளமுடியாமல் போனது.
69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்குஇந்த சீசனில் இது 4வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் பெங்களூரு அணி முதல் தோல்வியை பெற்றது.
புள்ளிகள் பட்டியல்அணிஆவெதோபுசென்னை5418பெங்களூரு5418டெல்லி4316மும்பை5234பஞ்சாப்5234ராஜஸ்தான்5234ஹைதராபாத்4132கொல்கத்தா5142
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT