Published : 09 Apr 2021 03:12 am

Updated : 09 Apr 2021 03:12 am

 

Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

ரூ.4,500 கோடி சூரிய மின்னுற்பத்தி திட்டத்துக்கு ஒப்புதல் :

புதுடெல்லி

உற்பத்தி அடிப்படையிலான ஊக்கச் சலுகை (பிஎல்ஐ) அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.4,500 கோடி மதிப்பிலான சூரிய மின்னுற்பத்தி திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது தொடர்பான அறிவிப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிக திறன் மிக்க சூரிய மின்னுற்பத்தி பேனல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இத்திட்டப் பணிகளுக்கு சலுகை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம் சூரிய ஆற்றல் மூலம் கூடுதலாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். இத்திட்டப் பணிகள் மூலம் ரூ. 17,200 கோடி முதலீட்டில் சூரிய மின்னுற்பத்தி சார்ந்த திட்டங்கள் நிறைவேறும். இந்த திட்டப் பணிகள் மூலம் 30 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1.2 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x