

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஏழை மக்கள் சுகாதார வசதியைப் பெறுவதற்காக மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தை (ஏபி-பிஎம் ஜேஏஒய்) என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதற்காக நாடு முழுவதும் 70 ஆயிரம் சுகாதார மற்றும் நல மையங்களை (எச்டபிள்யூசி) மத்திய அரசு திறந்துள்ளது. இந்தமையங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 40 கோடி மக்கள் சுகாதார வசதிகளைப் பெற்றுள்ளனர்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பிரதான தூணாகத் திகழ்வது இந்த சுகாதார நல மையங்கள்தான். இந்த மையங்கள் மூலமாக ஏழைமக்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ வசதிகளைப் பெற்றுள்ளனர். விரைவில் இந்த மையங்களின் எண்ணிக்கைை 1.50 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 41.5 கோடி மக்கள் இந்த மையங்களை நாடி சிகிக்சை பெற்றுள்ளனர். இதில் 54 சதவீதம் பேர் பெண்கள்.
நீரிழிவு, உயர் அழுத்தம், மார்பகம், வாய், கருப்பை புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.