Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

நவம்பர் மாதம்ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நவம்பர் மாதத்தில் ரூ.1.04 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.05 லட்சம் கோடியாக இருந்தது. 2019-ம் ஆண்டு நவம்பரில் வசூலான தொகையை விட இது 1.4 சதவீதம் (ரூ.1,03,491 கோடி) அதிகமாகும்.

இறக்குமதி பொருள் மூலமான வரி 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வசூலான தொகையைக் காட்டிலும் 0.5 சதவீதம் அதிகமாகும். நவம்பரில் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1.04,963 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.19,189 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.25,540 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.51,992 கோடி (இறக்குமதி பொருள் மீதான வரி வருவாய் ரூ.22,078 கோடி உள்பட), செஸ் ரூ.8,242 கோடி (ரூ.809 கோடி இறக்குமதி பொருள் மீதான தொகை உள்பட) அடங்கும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x