Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அனுமதி கோரி விண்ணப்பம்

மாடர்னா இன்கார்ப்பரேஷன் நிறுவனம் கரோனா தடுப்பூசி கண்டுபிடித்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு எம்ஆர்என்ஏ-1273 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2 கோடி தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க முடியும் என நிறுவனம் கருதுகிறது.

இந்த தடுப்பூசி மருந்தை சோதனை ரீதியில் பரிசோதித்ததில் 94.1 சதவீத அளவுக்கு பலனளித்ததோடு எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்தானது அனைத்து வயது பிரிவினருக்கும் ஏற்றது. எந்த சூழலில் வாழ்பவர் மற்றும் நிறம் ஆகியன இந்த தடுப்பூசி மருந்து செயல்பட தடையாக இல்லை எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே தங்களது தடுப்பூசி மருந்துக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. தற்போது இரண்டாவது நிறுவனமாக மாடர்னா இன்கார்ப்பரேஷன் அனுமதி கோரியுள்ளது. தங்களது தடுப்பூசி செயல்பாடு சோதனையில் 100 சதவீத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டது என்பதற்கான தகவல் தொகுப்புகள் ஆதாரப்பூர்வமாக உள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி தால் ஜாக்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x