Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

சிவசேனா கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர்

சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே முன்னிலையில் அக்கட்சியில் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் இணைந்தார்.

பாலிவுட் நடிகையான ஊர்மிளா மடோன்கர் 1993-ல் வெளிவந்த ரங்கீலா படத்தின் மூலம் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து ஜுதாய், சத்யா உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ஊர்மிளா. தமிழில் இந்தியன் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஊர்மிளாவுக்கு மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் ஊர்மிளா தோல்வி அடைந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸில் இருந்து விலகினார். இந்நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில்நேற்று ஊர்மிளா இணைந்தார்.

மகாராஷ்டிர மாநில சட்ட மேலவையில் நடிகை ஊர்மிளாவை உறுப்பினராக்க சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஊர்மிளாவுடன் 12 பேர் கொண்ட பட்டியலை சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி (எம்விஏ) அரசு அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x