Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளுக்கு யுஏஇ விசா ரத்து

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா, வர்த்தக விசா வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அறிவித்துள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான், இராக் போன்ற நாடுகளில் தற்போது கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், இராக், துருக்கி, ஏமன் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா, வர்த்தக விசா வழங்குவதை தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாக ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x