Published : 01 May 2022 08:35 AM
Last Updated : 01 May 2022 08:35 AM

மே 5-ம் தேதி முதல் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி: திருப்பதி தேவஸ்தானம்

திருமலை:திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீநிவாச மங்காபுரம் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை வழியாக, திருமலைக்கு செல்ல பக்தர்கள் மே மாதம் 5-ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்தார்.

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "திருப்பதியில் விரைவில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். வரும் மே மாதம் 5-ம் தேதி முதல் சீரமைக்கப்பட்ட ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். திவ்ய தரிசனம் மீண்டும் தொடங்கப்படும்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, வரும் 5-ம் தேதி திருப்பதி வருகிறார். அப்போது, திருப்பதியில் கட்டப்பட்ட ஸ்ரீநிவாச மேம்பாலம் திறப்பு விழாவில் அவர் கலந்துகொள்வார். மேலும், 2-ம் கட்ட மேம்பால பணிகளுக்காக தேவஸ்தானம் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திருப்பதி அலிபிரி மலைவழிப்பாதை சீரமைப்பு பணிகளுக்காக ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கும் அறைகளுக்காக ரூ. 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி-திருமலை இடையே பேட்டரி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வேலூரில் உள்ள தேவஸ்தான தகவல் மையம் மற்றும் கோயில் உள்ள இடத்தில் புதிதாக கோயில் கட்டப்படும். உளுந்தூர் பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட முதற்கட்டமாக ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு சுப்பாரெட்டி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x