Published : 09 Dec 2021 03:06 AM
Last Updated : 09 Dec 2021 03:06 AM

தமிழகத்தில் புதிதாக 703 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 427, பெண்கள் 276 என மொத்தம் 703 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக சென்னையில் 122, கோவையில் 117 பேர்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 32,648 ஆக அதிகரித்துள்ளது.

11 பேர் உயிரிழப்பு

தமிழகம் முழுவதும் 7,946 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 11 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,560 ஆக உயர்ந்துள்ளது. செனனையில் மட்டும் 8,622 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித் துள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x