Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்று - ரஜினிகாந்துடன் சசிகலா திடீர் சந்திப்பு :

நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலா நேற்று சந்தித்து பேசினார்.

ரஜினிகாந்தின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்கு சசிகலா நேற்று சென்றார். அங்கு ரஜினிகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்ததுடன், தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்காக மலர்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். அப்போது லதா ரஜினிகாந்த் உடன் இருந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, கடந்த ஜனவரியில் விடுதலையானார். அப்போது, அவருக்கு கரோனா பாதிப்புஇருந்தது. அதற்கு சிகிச்சை பெற்ற பிறகு சென்னை திரும்பினார்.

தியாகராய நகரில் உறவினர் வீட்டில் தங்கிய சசிகலாவை பல்வேறு பிரமுகர்களும் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். அப்போது, சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்தும் கேட்டறிந்தார்.

தீவிர அரசியலில் ஈடுபடுவதாக சசிகலா கூறினார். அதனால், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்துவிலகுவதாக திடீரென அறிவித்தார்.

பின்னர் நடைபெற்ற தேர்தலில்அதிமுக ஆட்சியை இழந்தது. அதைத் தொடர்ந்து, அதிமுகவைகைப்பற்றும் முயற்சியில் சசிகலாதொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில், ‘‘கழகத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.விரைவில் நல்லது நடக்கும்’’ என்று அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

ரஜினியைப் பொருத்தவரை, தனது அரசியல் வருகைக்கான ஆயத்த ஏற்பாடுகளை தொடர்ந்துமேற்கொண்டு வந்த நிலையில்,ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கட்சி தொடங்கி அரசியலுக்கு வர இயலவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.

ரஜினிகாந்தின் திரையுலக சாதனைக்காக அவருக்கு தாதாசாகேப் பால்கே விருதை மத்தியஅரசு சமீபத்தில் வழங்கி கவுர வித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x