Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM

மேஷம்: சகோதரர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக் கூடும்

மேஷம்: சகோதரர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக் கூடும். அடுத்தடுத்த செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள் மின்சார சாதனங்களைக் கவனமாக கையாளுங்கள்.ரிஷபம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பயணத்தால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.மிதுனம்: வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடிவுக்கு வரும். தந்தைவழியில் உதவிகள் பெறுவீர்கள்.கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் தேடி வரும்.சிம்மம்: சோர்வு, களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படு வீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்டநாள் பிரச் சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு கிடைக்கும்.துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். வெளியூர் பயணம் உண்டு.விருச்சிகம்: உடல் உஷ்ணத்தால் சில பிரச்சினைகள் ஏற்படக் கூடும். யாருக்கும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள்.தனுசு: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நீண்ட காலமாக விலகியிருந்த உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.மகரம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்களிடம் இருந்துவந்த பகை நீங்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்தி தரும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x