Last Updated : 02 Dec, 2021 03:08 AM

 

Published : 02 Dec 2021 03:08 AM
Last Updated : 02 Dec 2021 03:08 AM

வேலூர் கோட்டை வளாகத்தில் - தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை : கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கின

வேலூர்  ஜலகண்டேஸ்வரர் கோயில் வளாகத்தில் தேங்கியுள்ள இடுப்பளவு தண்ணீரை வெளி யேற்றுவதற்கான பணிகள் நேற்று தொடங்கின. ‘இந்து தமிழ் திசை’ செய்தியை தொடர்ந்து, தூர்ந்துபோன கால்வாய்கள் பொக்லைன் மூலம் தோண்டப்பட்டது.

வேலூர் நகரில் 16-ம் நூற் றாண்டில் விஜயநகர பேரரசர் சதாசிவராயர் ஆட்சிக்காலத்தில் வேலூர் கோட்டை கட்டப்பட்டது. சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் அழகிய அகழியுடன் காட்சி யளிக்கும் வேலூர் கோட்டை வரலாற்று சிறப்புமிக்க கோட்டை யாக இன்று வரை திகழ்ந்து வருகிறது.

கடந்த 1760-ம் ஆண்டு வேலூர் கோட்டை ஆங்கிலேயேர்கள் ஆளுமைக்கு கீழ் வந்தது. அதன்பிறகு, நீர்மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வேலூர் கோட்டையை ஆங்கிலேயர்கள் மாற்றினர்.

வேலூர் கோட்டையை சுற்றி யுள்ள அகழியில் வறட்சிக் காலங்களிலும் தண்ணீர் வற்றாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கோட்டை எதிரேயுள்ள மலைகளில் இருந்து வரும் மழைநீரை அகழியில் சேமிக்கவும், அகழியில் இருந்து வெளியேறும் உபரி நீர் பாலாற்றில் கலக்கும் வகையில் மதகுகளுடன் கூடிய கால்வாய்களை ஆங்கிலேயர்கள் கட்டமைத்தனர்.

இந்நிலையில், வேலூர் மாவட் டத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த கனமழையால் அகழியின் நீர்மட்டம் உயர்ந்து  ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்தது. கோயில் வளாகம் முழுவதும் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று கோயில் வளா கத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக் கைகளை ஆய்வு செய்தார்.

அப்போது, அகழியில் தேங்கியுள்ள 5 அடி அளவுக்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டி யுள்ளதால், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கால்வாயை மீட்க வேண்டும். மேலும், கோட்டை அகழியின் உபரி நீர் வெளியேறும் கால்வாய் நிக்கல்சன் கால்வாயுடன் இணை கிறது.

தற்போது, தூர்ந்துபோன அந்த கால்வாயை தோண்ட வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 26-ம் தேதி படத்துடன் வெளியானது.

இதைத்தொடர்ந்து, கோயில் வளாகத்தில் தேங்கியுள்ள தண் ணீரை வெளியேற்றும் பணிகளை அதிகாரிகள் நேற்று தொடங்கினர். வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகே உள்ள கால்வாய் வழியாக நிக்கல்சன் கால்வாயுடன் இணையும், தூர்ந்துபோன அந்த கால்வாய் பொக்லைன் மூலம் நேற்று தோண்டப்பட்டது.

தொல்லியல் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் தோண்டும் பணிகளை ஆய்வு செய்தனர். ஆங்கிலேயர் கால கால்வாய் தோண்டப்பட்டால் அகழியில் உள்ள உபரி நீர் விரைவில் வெளியேறிவிடும். இதன் மூலம் கோயில் வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் தடுக்க முடியும்’’ என அதிகாரிகள் தெரி வித்தனர்.

இதைத்தொடர்ந்து, ஜலகண் டேஸ்வரர் கோயிலில் தேங்கியுள்ள தண்ணீரை இரண்டு மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகளும் நேற்று தொடங்கியுள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x