Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM

அரக்கோணம் பகுதியை சென்னையுடன் இணைப்பதற்காக - ராணிப்பேட்டையில் பொதுமக்கள் கருத்து கேட்பு :

அரக்கோணம் நகரை சென்னை பெருநகரம் எல்லை விரிவாக் கத்துக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ராணிப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் லட்சுமி வரவேற்றார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுப்பினர் அன்ஷல்மிஷ்ரா அறிமுக உரையாற்றினார். அரசு முதன்மை செயலாளர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.

பின்னர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா, செய்தியாளர்களிடம் கூறும்போது, "ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பகுதியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் இணைப் பதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அதற்கான அறிக்கை மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன் அடிப்படையில் சென்னை பெருநகரத்துடன் அரக்கோ ணத்தை இணைப்பது குறித்து அரசு முடிவெடுக்கும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் ஏற்கெனவே கருத்துக்கேட்பு நடத்தப்பட்டுள் ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பாதியளவு அரக்கோணம் பகுதியை உள்ளடக்கி சென்னை பெருநகர எல்லையை 8,800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குவிரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. சென்னை தற்போது 1,189 சதுர கிலோ மீட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஏற்கெனவே ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. அரக்கோணம் பகுதியிலும் மக்கள் மத்தியில் இத்திட்டத்துக்கு வரவேற்புள்ளது. எவ்வளவு விரிவாக்கம் செய்யலாம் என்பதை அரசு தான் தீர்மானிக்கும்.

அரக்கோணம் பகுதி மக்களின் கருத்துக்கேட்பு முடிவடைந்த உடன் 6 மாத காலத்துக்குள் அரசு இத்திட்டத்துக்கான இறுதி முடிவை செயல்படுத்தும்’’ என்றார்.

கருத்துக்கேட்புக்கூட்டத்தில், அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் மாவட்ட வருவாய் அலுவலர் சிவராசு, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் மூத்த திட்ட அமைப்பாளர் காஞ்சனாமாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x