Published : 26 Nov 2021 03:07 AM
Last Updated : 26 Nov 2021 03:07 AM

ஆன்லைன் குவிஸ் போட்டியில் 3-ம் இடம் பிடித்த கோவை மாணவர் :

கோவை : ‘இந்து தமிழ்திசை’ மற்றும் ஃபிட்ஜி பயிற்சி நிறுவனம் சார்பில், கடந்த மார்ச் மாதம் ‘மைன்ட் பென்ட்’ என்ற தலைப்பில் ஆன்லைன் வாயிலாக குடும்பங்களுக்கான குவிஸ் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். குவிஸ் மாஸ்டராக வினோத்குமார் பணியாற்றினார். மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஒருங்கிணைந்து, குழுவாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு போட்டியில் பங்கேற்பதற்காக, இந்த குவிஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுவித்துக் கொள்ளவும், மூளையை உபயோகப்படுத்தும் திறனை அதிகரிக்கவும் வாய்ப்பாக இந்த போட்டி அமைந்தது. குவிஸ் போட்டியில், கோவை தடாகம் சாலை, பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் விமல்ராஜ் 3-வது இடம் பிடித்தார். அவருக்கு பள்ளியின் முதல்வர் பெரியநாயகி, ஃபிட்ஜி நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் வெற்றிக் கோப்பையை வழங்கினர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x