Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் குறித்து புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி ஆலைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை அறிவித்துள்ளது.

இவ்வகை பிளாஸ்டிக் பொருட் களான பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுக்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட் களை பொட்டலமிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பது, சேமிப்பது, விநியோகிப்பது, போக்குவரத்து செய்வது, விற்பது, பயன்படுத்துவது ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தடை ஆணையை செயல்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், ஆய்வுகள், புகார்கள் அடிப்படையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து மூட உத்தரவு பிறப்பித்து வருகிறது.

எனவே, சுற்றுச் சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் இவ்வாறான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்த தகவலை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள சுற்றுச் சூழல் பொறியாளருக்கு புகார்களை தெரிவிக்கலாம்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் https://tnpcb.gov.in/contact.php என்ற இணைய தளத்தில் மின்னஞ்சல், தொலைபேசி எண், வாட்ஸ் அப் எண் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x