Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

மேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்

மேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.ரிஷபம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள் வீர்கள். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம், பாராட்டு கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு காண்பீர்கள்.மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். திடீர் பயணம் ஏற்படும்.கடகம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும்.சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.துலாம்: எதையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடிவுக்கு வரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.தனுசு: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.மகரம்: உங்களின் திறமைகள் வெளிப்படும். கடினமான காரியங் களையும் எளிதாக முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ரசனைக்கேற்ப வீட்டை மாற்றியமைப்பீர்கள்.கும்பம்: உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து ஆலோசிப்பீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x