Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

வளர்ச்சி திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் செயல்படுங்கள் : அரசு அலுவலர்களுக்கு கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் அறிவுரை

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவல கக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண் காணிப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் பி.என்.தர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத் தில், குழுவின் தலைவர் கவுதம சிகாமணி எம்.பி பேசியது:

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண் காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்பதற்காக இக்குழுஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துதிட்டப் பணிகளும் வழிகாட்டு நெறி முறைகளின்படி செயல்படுவதை இக்குழு உறுதி செய்யும்.

தேசிய திட்டங்கள் குறித்து மாவட்ட திட்டக் குழுவிற்கு வழிகாட்டுதல், குறிக்கோள்களை உரிய காலத்தில் முடித்தல், மத்திய மாநிலஅரசால் திட்டங்களுக்கு ஒதுக்கப் பட்ட நிதி குறித்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட நோக்கங்களை கொண்டு இக்குழு செயல்படுகிறது.

மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களும் மக்க ளுக்கு சென்றடையும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, மாவட்ட வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிட வேண்டும் என்றார்.

கோஷ்டி பூசலுக்கு மத்தியில்…

கள்ளக்குறிச்சி மாவட்ட திமுகவினரிடையே நிலவும் கோஷ்டி பூசலாலும், தனது தந்தை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக எம்எல்ஏ-க்கள் தனி அணியாக செயல்படுவதாலும், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுதம சிகாமணி, இம்மாவட்டத்தில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை.

மாறாக கள்ளக்குறிச்சி மக்கள வைத் தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டபேரவைத் தொகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இந்த மக்களவைத் தொகுதியில் உள்ள திமுகவினர் குற்றம்சாட்டுவதாக கடந்த 19-ம் தேதி நமது ‘இந்து தமிழ் திசை’யில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் கவுதம சிகாமணி நேற்று இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் உளுந்தூர் பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன் பங்கேற்ற நிலையில், ரிஷிவந்தியம், சங்கரா புரம் திமுக சட்டப்பேரவை உறுப் பினர்கள் பங்கேற்கவில்லை என் பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x