Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

தொடர்ந்து பைக் திருடி வந்த மெக்கானிக் கைது : புதுச்சேரியில் 3 பைக்குகள், உதிரி பாகங்கள் பறிமுதல்

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங் களின் திருட்டு அதிகரித்துள்ளது. திருட்டு வாகனங்களில் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்திச் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, சட்டம் - ஒழுங்கு சீனியர் எஸ்பி லோகேஸ்வரன் உத்தரவின்படி, போலீஸார் வாகனசோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இந்நிலையில், பெரியகடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் காசநோய் மருத்து வமனை அருகே நேற்று முன் தினம் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர்.

அப்போது, நம்பர் பிளெட் இல்லாமல் பைக்கில் வந்த ஒருவர், முன்னுக்குப் பின் முர ணாக பதில் கூற, அவரிடம் விசா ரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் புதுச்சேரி சங்கரதாஸ் வீதியைச் சேர்ந்த சம்பத்குமார் (55) என்பதும், அவர் ஓட்டி வந்த பைக் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள எஸ்பிஐ வங்கி அருகில் திருடி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர், பெரியகடை, ஒதியஞ்சாலை காவல் சரக எல்லைகளில் 8 பைக்குகள் திருடியதை ஒப்புக் கொண்டார்.

சம்பத்குமார் திருடிய பைக்குகளில், 3 பைக்குகளை தவிர்த்து மற்றவைகளை அவர் வடமங்கலத்தில் நடத்தி வரும் தன்னுடைய மெக்கானிக் ஷாப்பில் வைத்து உதிரி பாகங்களை தனியாக கழற்றி, கடைக்கு வரும் நபர்களிடம் குறைந்த விலைக்கு விற்றதும், மீதிமுள்ள பாகங்களை பழைய இரும்பு கடைகளில் விற்றதும் தெரிய வந்தது.

அவரை கைது செய்த போலீஸார், 3 பைக்குகள் மற்றும் பைக் உதிரிபாகங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x