Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

தமிழகத்தில் புதிதாக 741 பேருக்கு கரோனா :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 421, பெண்கள் 320 என மொத்தம் 741 பேர்கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 119, சென்னையில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம்தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 21,762 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 26 லட்சத்து 76,825 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 808 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 8,536 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x