Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

கிலோ ரூ.600-ஐ கடந்த வெண்பட்டுக்கூடு விலை :

தருமபுரி அரசு பட்டுக்கூடு விற்பனை அங்காடியில் பட்டுக் கூடுகளுக்கான விலை ரூ.600-ஐ கடந்தது.

தருமபுரி 4 சாலை அருகே அரசு பட்டுக்கூடு விற்பனை அங்காடி செயல்படுகிறது. இங்கு நேற்று பட்டுக் கூடுகளுக்கான விலை கிலோ ஒன்றுக்கு ரூ.600-ஐ கடந்தது. கடந்த 9-ம் தேதி கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.413 கிடைத்தது. அடுத்தடுத்த நாட்களில் புயல் காரணமாக தொடர் மழை பெய்தது. மழை காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் வரத்து குறையத் தொடங்கியது. எனவே, கடந்த 12-ம் தேதி கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.560 என விலை உயர்வு ஏற்பட்டது. 13-ம் தேதி கிலோவுக்கு ரூ.604 வரை உயர்ந்தது. பின்னர், 15-ம் தேதி கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.540 கிடைத்தது. அன்று முதல் 22-ம் தேதி வரை கிலோவுக்கு அதிகபட்ச விலையாகரூ.540-க்கும் ரூ.589-க்கும் இடையில் ஏற்ற, இறக்கங்களுடன் விலை கிடைத்து வந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் கிலோவுக்கு அதிகபட்ச விலையாக ரூ.601 என நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்றைய ஏல விற்பனைக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9 விவசாயிகள் 498.570 (17 லாட்) கிலோ வெண் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவற்றுக்கு கிலோவுக்கு அதிகபட்ச விலையாக ரூ.601-ம், குறைந்த பட்ச விலையாக ரூ.361-ம், சராசரி விலையாக ரூ.525.80-ம் கிடைத்தது. நேற்றைய ஏலத்தின் மூலம் அரசு பட்டுக்கூடு விற்பனை அங்காடியில் ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 149-க்கு ஏல வர்த்தகம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x