Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM

142 அடியாக உயர்த்துவதற்காக - பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் குறைப்பு :

முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் 142 அடி அளவு நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக தமிழக, கேரள பகுதிக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையில் நீர் நிலைநிறுத்த விதிமுறைகளின்படி (ரூல்கர்வ்) தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிக நீர்வரத்தால் 142 அடியை எட்டும் வாய்ப்பு இருந்தும், கடந்த மாதம் 29-ம் தேதி கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடந்த 20-ம் தேதி வரை 141 அடி அளவு நீரைத் தேக்கவும், அதன்பிறகு ஒவ்வொரு நாளும் நீரின் அளவை சிறிது சிறிதாக அதிகரித்து நவ.30-ல் 142 அடி யாக உயர்த்தவும் விதிமுறை உள்ளதால் தொடர்ந்து தமிழகம், கேரள பகுதிக்கு அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை மற்றும் நீர்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே வரும் 30-ம் தேதிக்குள் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் நீர் வெளி யேற்றம் வெகுவாக குறைக்கப் பட்டுள்ளது.

இதன்படி கேரள பகுதிக்கு விநாடிக்கு 781 கனஅடி வெளி யேற்றப்பட்ட நீர் நேற்று நிறுத் தப்பட்டது. அதேபோல், தமிழ கத்துக்கு திறக்கப்பட்ட 2 ஆயிரம் கன அடி நீர் நேற்று 467 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

தற்போது அணையின் நீர் மட்டம் 141.10 அடியாகவும், நீர்வரத்து ஆயிரத்து 992 கன அடியாக உள்ளது.

தொடர்மழை பெய்து அதிக நீர்வரத்து இருந்தால் மட்டுமே 142 அடி அளவுக்கு நீர்மட்டம் உயரும் நிலை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x