Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

தற்காலிக கடைகள் அமைக்க எதிர்ப்பு - குமரியில் வியாபாரிகள் கடையடைப்பு :

கன்னியாகுமரியில் தற்காலிக கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரியில் சபரிமலை வழிபாட்டுக்கு உகந்த இரண்டரை மாதங்கள் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிவர். இதற்காக கன்னியாகுமரி பேரூராட்சி, இந்து அறநிலையத்துறை ஆகியவை சார்பில் தற்காலிக கடைகள் ஏலம் விடுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பால் இக்கடைகளுக்கான ஏலம் நடைபெறவில்லை. தற்போது சபரிமலை வழிபாட்டுக் காலம் தொடங்கினாலும் கரோனா கட்டுப்பாடுகளால் பேரூராட்சி நிர்வாகம் தற்காலிக கடைகளுக்கு ஏலம் விடவில்லை. இந்நிலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரை பகுதியில் உள்ள இடத்தில் 48 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

முறையான நடைமுறை ஏதும் இன்றி தன்னிச்சையாக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். நடைபாதைகளில் இக்கடைகள் அமைக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவதுடன், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். எனவே நடைபாதைகளில் தற்காலிக கடைகள் அமைக்ககூடாது வலியுறுத்தி கன்னியாகுமரியில் உள்ள வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரைச் சாலை, சன்னதி தெரு, ரதவீதி, காந்திமண்டப கடை வீதி, பார்க் வியூ கடை வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x