Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

மஞ்சள் ரேஷன் கார்டுக்கும்ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நேற்று இரவு புதுச்சேரிக்கு வந்தது. அக்குழுவினருடன் சட்டப்பேரவை வளாகத்தில் கலந்து ஆலோசித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:

புதுச்சேரி, காரைக்காலில் மொத்தமாக 7 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்ககள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வீடுகள், கால்நடைகளை இழந்துள்ளனர். இடைக்கால நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.300 கோடி கேட்டுள்ளோம்.

மழைக்கால நிவாரணமாக சிவப்பு அட்டைதாரர்களுக்கு அளித்தது போல மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். தீபாவளிக்கு அறிவித்த 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை அடுத்த வாரம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x