Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று இலவச சித்த மருத்துவ சிறப்பு முகாம் :

சேலம்: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை, சேலம் மாநகராட்சி சார்பில் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (22-ம் தேதி) மழைக்கால சித்த மருத்துவ சிறப்பு முகாம் மற்றும் சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி நடக்கிறது.

முகாம் மற்றும் கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைக்கிறார். முகாமில், மழைக் காலத்தில் பரவக் கூடிய நோய்களான சளி, இருமல், காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் சுவாச நோய்கள் வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், நோய்களுக்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x