Published : 19 Nov 2021 03:07 AM
Last Updated : 19 Nov 2021 03:07 AM

பங்குச் சந்தையில் பட்டியலானது பேடிஎம் : தொடக்க நாளில் நிறுவனர் ஆனந்தக் கண்ணீர்

மொபைல் செயலி மூலம் பணப் பரிவர்த்தனை சேவை அளிக்கும் பேடிஎம் நிறுவனம் பங்குச் சந்தையில் நுழைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மும்பை பங்குச் சந்தைஅலுவலகத்தில் உள்ள அரங்கில் முதலீட்டாளர்கள் மத்தியில் பேசியபேடிஎம் நிறுவனர் விஜய் சேகர்சர்மா, ஒரு கட்டத்தில் நெகிழ்ந்துபோய் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். கைக்குட்டையால் கண்ணீரை அவர் துடைத்துக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

பொறியியல் பட்டதாரியான விஜய் சேகர் சர்மா, 2010-ம் ஆண்டில் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்கான செயலியாக பேடிஎம்மை தொடங்கினார். பின்னர் உபெர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தபேடிஎம் செயலியை பரிந்துரைத்தபோது இதன் உபயோகிப்பாளர் எண்ணிக்கை அதிகரித்தது. 2016-ம்ஆண்டு மத்திய அரசு பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டபோது டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி மக்கள் படையெடுத்தனர். அப்போது பேடிஎம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை எட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x