Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

டேபிள் டென்னிஸ் :

 இங்கிலாந்தில் 1880-களில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

 கால்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளுக்கு அடுத்ததாக அதிகம் பேரை கவர்ந்த ஆட்டமாக டேபிள் டென்னிஸ் உள்ளது.

 1988-ம் ஆண்டுமுதல் ஒலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் ஆடப்பட்டு வருகிறது.

 சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு 1926-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் 226 நாடுகள் உள்ளன.

 டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சீன வீரர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

 டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு ‘பிங் பாங்’ என்ற பெயரும் உண்டு.

 கண்களை பாதிக்கும் என்று கூறி 1930-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை சோவியத் யூனியனில் டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 டேபிள் டென்னிஸ் விளையாட்டில் 2015-ம் ஆண்டு முதல் செல்லுலாய்டு பந்துக்கு பதிலாக பிளாஸ்டிக் பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

 2000-ம் ஆண்டு வரை டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஒரு செட் என்பது 21 புள்ளிகளை கொண்டதாக இருந்தது. பின்னர் அது 11 புள்ளிகளாக குறைக்கப்பட்டது.

 ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் வீரர்கள் உலகில் பல்வேறு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x