Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

புதிதாக 850 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 496, பெண்கள் 354 என மொத்தம் 850 பேர்கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 129, கோவையில் 96 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 9,080 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 26 லட்சத்து 62,386 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றுமட்டும் 958 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 10,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று 6 பேர்உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,220 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x