Published : 03 Nov 2021 03:08 AM
Last Updated : 03 Nov 2021 03:08 AM

காங்கிரஸிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகல் - பஞ்சாப் லோக் காங்கிரஸ் : புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் அமரிந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் நேற்று அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மேலும் தனது புதிய கட்சியின் பெயரையும் அவர் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்குக்கும், மூத்த தலைவரும் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரிந்தர் சிங் விலகினார். இதனால் அதிருப்தியடைந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒதுங்கிய அமரிந்தர் சிங் கடந்த மாதத்தில் மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லி சென்று சந்தித்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியது. ஆனால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தயார் எனவும் அமரிந்தர் சிங் அறிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் நேற்று அறிவித்தார். மேலும் bிலகல் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அமரிந்தர் சிங் சார்பாக ஊடக ஆலோசகர் ரவீன்துக்ரால் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் (அமரிந்தர் சிங்) விலகும் முடிவு இறுதியானது. எனது கட்சியின் பெயர் ஐஎன்சி இந்தியா என்று சிலர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. கட்சியின் பெயர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் ஆகும்.

காங்கிரஸ் தலைவர்களுடன் நான் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை. எனக்கு இதுவரை ஆதரவு அளித்ததற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமரிந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x