Published : 02 Nov 2021 03:08 AM
Last Updated : 02 Nov 2021 03:08 AM

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் - துணிச்சலுடன் செயல்பட தவறிவிட்டோம் : இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆதங்கம்

துபாய்

ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் துபாயில் நேற்றுமுன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்திய அணியை 8விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 110 ரன்கள் மட்டுமே சேர்த்தது.111 ரன்கள் இலக்கை விரட்டிய நியூஸிலாந்து, 33 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இது 2வது தோல்வியாக அமைந்தது. இதனால் அரை இறுதிக்குமுன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய அணி.

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “நாங்கள் களத்தில் நுழையும்போது தைரியமாக இருக்கவில்லை. உண்மையைக் கூறவேண்டுமெனில் பேட்டிங், பந்து வீச்சில் நாங்கள் துணிச்சலுடன் விளையாடவில்லை. ஆனால் நியூஸிலாந்து அணி அழுத்தத்தை எங்கள் மீது வைத்துக்கொண்டே இருந்தது.

இந்திய அணிக்காக விளையாடும் போது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. நாங்கள் கவனிக்கப்படுகிறோம், இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொருவரும் அதை ஏற்றுக்கொண்டு சமாளிக்கவேண்டும். கடந்த 2ஆட்டங்களிலும் நாங்கள் அதை செய்யவில்லை. இதுதான் நாங்கள் வெற்றி பெறாததற்குக் காரணம்.

நாங்கள் நம்பிக்கையுடனும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும். அழுத்தத்தில் இருந்து விடுபட்டு எங்கள் செயல்முறையைத் தொடர வேண்டும். இந்தத் தொடரில் விளையாட இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன” என்றார்.

இன்றைய போட்டிவங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா

நேரம்: பிற்பகல் 3.30; இடம்: அபுதாபிநமீபியா - பாகிஸ்தான்

நேரம்: இரவு 7.30; இடம்: அபுதாபிநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x