Published : 02 Nov 2021 03:11 AM
Last Updated : 02 Nov 2021 03:11 AM

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - குமரி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 15,70,857 பேர் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆண் வாக்காளர்கள் 7,83,923 பேர், பெண் வாக்காளர்கள் 7,86,739 பேர், 3-ம் பாலினத்தவர் 195 பேர் என மொத்தம் 15,70,857 வாக்காளர்கள் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதி வாரியாக சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022-க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மலர்மேல் மங்கை, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தேர்தல் தனி வட்டாட்சியர் சேகர், மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஏற்கெனவே இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மார்ச் 19-ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அதில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக கன்னியாகுமரி 2,92,943 பேர், நாகர்கோவில் 2.70,402 பேர், குளச்சல் 2,68,218 பேர், பத்மநாபபுரம் 2,39,036 பேர், விளவங்கோடு 2,47,853 பேர், கிள்ளியூர் 2,53,199 பேர் என மொத்தம் 15,71,651 வாக்காளர்கள் இருந்தனர்.

சட்டப்பேரவை மற்றும் மக்களவை இடைத்தேர்தல் முடிந்த பின்னர் நடைபெற்ற தொடர் திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து இறந்த, இடம்பெயர்ந்த நபர்களை கண்டறிந்து நீக்கம் செய்யப்பட்டது.

அதன்படி 1,841 ஆண் வாக்காளர்கள், 2,392 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 4,234 பேர் சேர்க்கப்பட்டனர். 5,028 பேர் நீக்கப்பட்டனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,576 பேர், பெண் வாக்காளர்கள் 2,434 பேர், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் அடங்குவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x