Published : 30 Oct 2021 03:12 AM
Last Updated : 30 Oct 2021 03:12 AM

பிரதமர், முதல்வர்கள் இரங்கல் :

பிரதமர் நரேந்திர மோடி: விதியின் விளையாட்டு, ஒரு திறமையான நடிகரை நம்மிடம் இருந்து பறித்துச் சென்றுவிட்டது. எதிர்கால த‌லைமுறையினர் புனித் ராஜ்குமாரின் படங்கள் மற்றும் அற்புதமான ஆளுமைக்காக அவரை அன்புடன் நினைவுகூருவர். புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் மறைந்த செய்தி அறிந்து பெரும்அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவை பேணிவந்துள்ளோம். அந்த வகையில் இது எனக்கு தனிப்பட்ட இழப்பாகும்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை: புனித்தின் இறப்பு ஒட்டுமொத்த கர்நாடகாவுக்கும் சோகத்தை அளித்துள்ளது. அவர் இறந்த செய்தி அறிந்து, அப்படியே அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x