Published : 28 Oct 2021 03:06 AM
Last Updated : 28 Oct 2021 03:06 AM

மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு சகல வசதிகளுடன் புது வீடு கிடைக்கும்

மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு சகல வசதிகளுடன் புது வீடு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். கடன் பிரச்சினையைத் தீர்க்க வழி பிறக்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். விலகியிருந்த உடன்பிறந்த வர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வீடு, மனை வாங்க முன்பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.மிதுனம்: பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.கடகம்: யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.சிம்மம்: பணம் வந்தாலும் செலவுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள். கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும்.கன்னி: எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். மனைவிவழி உறவினரால் நன்மை ஏற்படும்.துலாம்: பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான காலம் கனிந்து வரும். நீண்டநாட்களாக விலகியிருந்த உறவினர், நண்பர்களைச் சந்திப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தக்க நேரத்தில் விஐபிகளின் உதவி கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள்.தனுசு: செல்போனில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவதை தவிர்த்து விடுங்கள். நீண்டதூரப் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. அக்கம்பக்கத்தினரால் சில தொந்தரவுகள் ஏற்படும்.மகரம்: எதிலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.கும்பம்: பிரச்சினைகள், சிக்கல்கள், உடல்நலக் குறைவு என்று, எது வந்தாலும் எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.மீனம்: பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x