Published : 27 Oct 2021 03:06 AM
Last Updated : 27 Oct 2021 03:06 AM

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை - தென் ஆப்பிரிக்கா வெற்றி :

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1-ல் நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி.

துபாயில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்களுக்குள் மட்டுப்படுத்தினர் தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள். டுவைன் பிரிட்டோரியஸ் 3, கேசவ் மகாராஜ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். அன்ரிச் நார்ட்ஜே 4 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார்.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் எவின் லீவிஸ் 35 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான லெண்டல் சிம்மன்ஸ் 35 பந்துகளை சந்தித்து 16 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட அவர் அடிக்கவில்லை. சிம்மன்ஸின் மந்தமான பேட்டிங் அணியின் ரன்குவிப்பை வெகுவாக பாதித்தது. நிக்கோலஸ் பூரன் 12, கிறிஸ் கெயில் 12, கேப்டன் கெய்ரன் பொலார்டு 26, ஆந்த்ரே ரஸ்ஸல் 5, சிம்ரன் ஹெட்மயர் 1 ரன் சேர்த்தனர்.

144 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிக்க அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எய்டன் மார்க்ரம் 26 பந்துகளில் 51 ரன்களும் ராசி வான் டெர் டசன் 51 பந்துகளில், 43 ரன்களும், ரேஸா ஹெண்ட்ரிக்ஸ் 39 ரன்களும் விளாசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x