Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

மேஷம்: ஊர் பொது காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்

மேஷம்: ஊர் பொது காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிநாட்டில் உள்ள நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். கலைப் பொருட்கள் சேரும்.ரிஷபம்: அலைச்சல் இருக்கும். ஆங்காங்கே பகை உணர்வு உண்டாகும். முன்கோபத்தால் சிலரது நட்பை இழக்க நேரிடும். எச்சரிக்கையாக பேசவும். பிற்பகல் முதல் நன்மை கிடைக்கும்.மிதுனம்: குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் வந்துபோகும். சகோதர உறவுகளால் டென்ஷன், ஏமாற்றம் வரக்கூடும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீண் அலைச்சல், செலவு ஏற்படும்.கடகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல்போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள்.சிம்மம்: சோம்பல், களைப்பில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்பா வீர்கள். எங்கு சென்றாலும் மரியாதை கூடும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். ஆன்மிக பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.கன்னி: எதிலும் வெற்றி, மகிழ்ச்சி உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய சிநேகிதரை சந்திப்பீர்கள்.துலாம்: பிள்ளைகள் உடல்நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்கள், அலைச்சல், செலவுகள் வந்துகொண்டே இருக்கும். பிற்பகல் முதல் மகிழ்ச்சி தொடங்கும். ஆன்மிக நாட்டம் கூடும்.விருச்சிகம்: கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிற்பகல் முதல் எதிலும் நிதானம் அவசியம். வாகனம் செலவு வைக்கும்.தனுசு: நினைத்த காரியங்கள் எல்லாம் சுலபமாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும்.மகரம்: செல்வாக்கு கூடும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு வாங்குவது, விற்பது நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு முடியும். உறவினர்கள், நண்பர்களுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம்.கும்பம்: விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். தள்ளுபடி விற்பனையில் புதிய வாகனம் வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.மீனம்: நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். மனைவி வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பல நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x