Published : 22 Oct 2021 03:05 AM
Last Updated : 22 Oct 2021 03:05 AM

இணையதள பயன்பாட்டை அதிகரிக்க கிராமங்களில் பறக்கும் மொபைல் டவர்கள்: பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் திட்டம்

பெங்களூரு

கிராமப்புறங்களில் இணையதள பயன்பாட்டை அதிகரிக்க பறக்கும் மொபைல் டவர்களை அமைக்க ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான விஎப்எல்ஒய்எக்ஸ் நிறுவனம், மின்னணு பொருள் தயாரிக்கும் எக்ஸ்-பூம்யுடிலிடிஸ் நிறுவனத்தின் அங்கமாகும். இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி, அபிவிருத்தி பிரிவு இத்தகைய பணிக்கான ட்ரோன்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த ட்ரோன்கள் சூரிய மின்னாற்றல், பேட்டரி மின்சாரம் அல்லது கேசோலின் ஆகியவற்றில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்படும். ஹைபிரிட் இன்ஜின் மூலமான செயல்பாடு மொபைல் டவருக்கான பணிகளை செயல்படுத்தும்.

மலைப்பகுதி மற்றும் தொலைத் தொடர்பு இணைப்பு வசதி இல்லாத பகுதிகளில் இத்தகைய பறக்கும் ட்ரோன்கள் மூலம்இணையதள வசதியை ஏற்படுத்தலாம் என்று நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (சிடிஓ) ரோஹித் தேவ் தெரிவித்தார்.

இந்நிறுவனம் தற்போது ஸ்வார்ம் ட்ரோன் தொழில்நுட்ப அடிப்படையிலான ட்ரோன்களை உருவாக்கி வருகிறது. இது பார்ப்பதற்கு பறவைகளைப் போன்ேறஇருக்கும். இதன் மூலம் பறக்கும்செல்போன் டவர்களை அமைப்பது, லேசர் கலை நிகழ்ச்சிகள், வான்வெளி விளம்பரம், பொருள்களைபிரபலப்படுத்துவது, பேரிடர் காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது உள்ளிட்ட பணிகளுக்குஇவற்றை பயன்படுத்த முடியும்.

இவை தவிர விடுமுறைவாழ்த்து, திருமண மற்றும் பிறந்தநாள் வாழ்த்து உள்ளிட்டவற்றைவெளிப்படுத்தவும் இவை பயன்படும் என்று தேவ் தெரிவித்துள்ளார். இவர் 2015-ம் ஆண்டு ட்ரோன்கள் குறித்த ஆராய்ச்சியில், நாசாவின் இளம் அறிவியலாளருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

இதுபோன்ற பறக்கும் டவர்களை அமைப்பது மிகவும் எளிதானது என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சவுரவ் தெரிவித்துள்ளார். இதுஅதிக செலவு பிடிக்காத, தேவைப்படும் இடத்துக்கு எளிதில் நகர்த்திச்செல்லும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பேரிடர் காலங்களில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ட்ரோன் ்தொழில்நுட்பத்தில் உள்ள வாய்ப்புகளால், பலரும் ஆராய்ச்சி பணிகளுக்கு முதலீடு செய்ய முன்வருவர். ட்ரோன்கள் பறக்கும் ரோபோட்டுகளாக செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் செயல்படும். இதன் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று சவுரவ் மேலும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x