Published : 22 Oct 2021 03:05 AM
Last Updated : 22 Oct 2021 03:05 AM

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள்.ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். என்றாலும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விஐபியுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.சிம்மம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை அவ்வப்போது தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட வேண்டாம்.துலாம்: உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார்.விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப் படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.மகரம்: வீட்டின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். நீண்டகாலப் பிரச்சி னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x