Published : 21 Oct 2021 03:05 AM
Last Updated : 21 Oct 2021 03:05 AM

டி 20 உலகக் கோப்பை - நெதர்லாந்தை வீழ்த்தியது நமீபியா :

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட சுற்றில்நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமீபியா.

அபுதாபியில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ் ஓ டவுட் 70 ரன்கள் விளாசினார். நமீபியா தரப்பில் ஜான் ஃப்ரிலிங்க் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

165 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நமீபியா 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள்எடுத்து வெற்றி பெற்றது. டேவிட்வைஸ் 66 ரன்களும், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் 32 ரன்களும் எடுத்தனர். ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளநமீபியாவுக்கு இது முதல் வெற்றி.அந்த அணி முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் வீழ்ந்திருந்தது. அதேவேளையில் நெதர்லாந்து 2-வது தோல்வியை சந்தித்து சூப்பர் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏறக்குறைய இழந்தது.

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அசத்தல்

டி20 உலகக் கோப்பை தொடரில்இந்திய அணி தனது 2-வது பயிற்சிஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்தியா 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 60, கே.எல்.ராகுல் 39, சூர்யகுமார் யாதவ் 38, ஹர்திக் பாண்டியா 14 ரன்கள் எடுத்தனர்.

பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பிரதான சுற்றான சூப்பர் 12-ல் இந்தியா வரும் 24-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x