Published : 20 Oct 2021 03:10 AM
Last Updated : 20 Oct 2021 03:10 AM

3 ஆண்டுகளாக நியமிக்கப்படாத மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அதிகாரி : மதுரையில் விதிமீறல் கட்டிடங்களை கண்காணிப்பதில் சிக்கல்

மதுரை மாநகராட்சியில் மாநகர முதன்மை நகரமைப்பு அதிகாரி பணியிடம் கடந்த 3 ஆண்டுகளாகக் காலியாக உள் ளது. அவருக்குப் பதிலாக யாரும் நியமிக்கப்படாததால் மதுரையில் விதிமீறல் கட்டிடங் களைக் கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரை நகரில் கட்டப்படும் வீடுகள், வணிகக் கட்டிடங்களை மாநகராட்சி முதன்மை நகர மைப்புப் பிரிவு ஆய்வு செய்து அனுமதி வழங்குகிறது.

10 ஆயிரம் சதுர அடி வரையிலான வீடுகளுக்கும், 2 ஆயிரம் சதுர அடி வரையிலான வணிகக் கட்டிடங்களுக்கும் மாந கராட்சி முதன்மை நகரமைப்பு பிரிவு அனுமதி வழங்கும் அதி காரம் பெற்றுள்ளது.

இதற்கு மேற்பட்ட சதுர அடி கொண்ட வீடுகள், வணிகக் கட்டிடங்களுக்கு உள்ளூர் திட்டக் குழுமம் அனுமதி வழங்குகிறது. முன்பு வீடுகளைப் பொறுத்தவரை 4,000 சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்குதான் மாநகராட்சி நகர மைப்பு அனுமதி வழங்கியது. தற்போது மாநகராட்சி அனுமதி அங்கீகாரம் 10,000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த காலத்தில் மாநகராட்சி நகரமைப்பு அதி காரிகள் முறையான ஆய்வு செய் யாமல் அனுமதி வழங்கியதாலும், வரைபட அனுமதியை மீறி கட்டிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக் காததாலும் விதிமீறல் கட்டிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

அதனால் வீடுகள், வணிக வளாகங்கள், நகர சாலைகள் ஒழுங்கற்று அமைந்து போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது நகரில் உள்ள விதி மீறல் கட்டிடங்கள், இவற்றால் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர் கார்த்தி கேயன் கண்டுபிடித்து கட்டிட அனுமதி மற்றும் வரி நிர்ணயம் உள்ளிட்டவற்றை சீராய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளாார்.

ஆனாலும் அவரது உத்தர வுகளை செயல்படுத்தி கட்டிடங் களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நகரமைப்புப் பிரிவில் போதிய அதிகாரிகள் இல்லை.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி முதன்மை நகர மைப்பு அதிகாரியாக இருந்த ஐ.ரெங்கநாதன் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இடமாற்றம் செய் யப்பட்டார்.

அவருக்குப் பதிலாகப் புதிய அதிகாரி இதுவரை நியமிக்கப்படவில்லை.

அந்த பொறுப்பில் அனுபவம் இல்லாத கீழ்நிலை அதிகாரிகளே பொறுப்பு அதிகாரிகளாக செயல் படுகின்றனர்.

அதனால், மாநகராட்சியில் புதிய வணிக கட்டிடங்களுக்கும், வீடுகளுக்கும் அனுமதி வழங் குவதில் முறையான வழி காட்டுதல்களும், அனுமதியும் பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நகரமைப்பு விதிகளைப் பின்பற்றி புதிய கட்டிடங்களுக்கும் அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகள் கூறியதாவது:

மாநகராட்சி பகுதியில் 10 ஆயிரம் சதுர அடி வரை வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப் படுகிறது.

1,500 சதுர அடி வரை அந்தந்த மண்டல அலுவலகத்திலேயே விண்ணப்பித்து உதவி நகரமைப்பு அதிகாரி, உதவிப் பொறியாளர் குழு ஆய்வு செய்து உதவி ஆணையரால் கட்டிட அனுமதி வழங்கப்படுகிறது.

1,500 சதுர அடிக்கு மேல் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மாநகராட்சி முதன் மை நகரமைப்பு அலுவலர் ஆய்வு செய்து ஆணையாளருக்கு கட்டிட அனுமதி வழங்கப் பரிந்துரை செய் வார்.

அவர் சரிபார்த்து அனுமதி வழங்குவார்.

தற்போது மாநகராட்சி முதன் மை நகரமைப்பு அதிகாரி பணி யிடம் காலியாக இருப்பதால் புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள் ளது.

அதேபோல் விதிமீறல் கட் டிடங்கள் புகார் வந்தால் அவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக் கவும் முடியவில்லை.

அதனால் மாநகராட்சி ஆணை யாளர் கார்த்திகேயன், முதன்மை நகரமைப்பு அதிகாரியை விரைவில் நியமிக்க வலியுறுத்தியதன் பேரில் கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி மதுரை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இதுவரை இப்பொறுப்பை ஏற்காததால் நகரமைப்புப் பிரிவு ஸ்தம்பித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x