Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் : தாராபுரத்தில் 200 ஏக்கர் நிலம் மீட்கப்படும் : எம்.பி. சுப்பராயன் தகவல் :

தாராபுரம் பகுதிகளில் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 200 ஏக்கர் நிலம் விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் எம்.பி. சுப்பராயன் தெரிவித்தார்.

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் சாலை, எர்ணாமேடு பகுதிகளில் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பயனாளிக்கு வழங்கியும், அதன் முன்னாள் உரிமையாளரே ஆக்கிரமிப்பில் வைத்திருந்த நிலையில் இ.கம்யூ. கட்சி சார்பில் அந்த நிலத்தை மீட்டு பயனாளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுப்பராயன் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தாராபுரம் வட்டம், மூலனூர், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கர் உபரி நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, விவசாயிக்கு ஒப்படைக்காமல் உள்ளது. எர்ணாமேடு பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை நேற்று மீட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் பயிர் சாகுபடியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். இதேபோல எஞ்சியுள்ள நிலங்களும் மீட்கப்பட்டு, நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x