Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

கடந்த 24 மணி நேரத்தில்15,981 பேருக்கு கரோனா தொற்று : குணமடைவோர் 98.08% ஆக உயர்வு

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 8 நாட்களாகவே நாடுமுழுவதும் கரோனா தொற்று 20 ஆயிரத்துக்கு கீழ் உள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 15,981 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 3 கோடியே 40 லட்சத்து 53,573 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 166 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 4 லட்சத்து 51,980 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 3 கோடியே 33 லட்சத்து 99,961 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், குணமடைவோர் சதவீதம் 98.08 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு மிக அதிகபட்சமாகும். தற்போது 2 லட்சத்து 1,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் ஒரு சதவீதத்துக்கும் கீழாக (0.59%) உள்ளது.

இந்தியாவில் இதுவரை 97 கோடியே 23 லட்சத்து 77,045 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 58 கோடியே 98 லட்சத்து 35,258 பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x