Published : 16 Oct 2021 06:10 AM
Last Updated : 16 Oct 2021 06:10 AM

பொறியியல் துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் :

தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஜி.லட்சுமி பிரபா, இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கையில் துணை கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்.14-ல் தொடங்கியது. அகாடமிக்,தொழிற்பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவுகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கும் கடைசி நாள் 17-ம் தேதி (ஞாயிறு)ஆகும். இதற்கான தரவரிசை பட்டியல் அக்.19-ல் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து, இணையவழி கலந்தாய்வு 20-ம் தேதி நடத்தப்பட்டு தற்காலிக ஒதுக்கீடு 22-ம் தேதி வழங்கப்படும். கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 23-ம் தேதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x