Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவு எடுப்பீர்கள்

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். விலகியிருந்த உறவினர், நண்பர்கள் மீண்டும் வருவார்கள்.ரிஷபம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும்.மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. திடீர் பயணம் ஏற்படும்.கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள்.சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள்.துலாம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.விருச்சிகம்: வெகுநாட்களாக மனதை வருத்திய பிரச்சினைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினர் அனுசரித்துச் செல்வார்கள் பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.மகரம்: பல வேலைகளை இழுத்துப் போட்ட பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.கும்பம்: ஆடம்பரமான செலவுகளைக் குறைப்பது நல்லது. மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x