Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக - ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் ‘கதி சக்தி’ தேசிய செயல் திட்டம் : பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

அடிப்படை கட்டமைப்பு வசதி களுக்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் ‘கதி சக்தி’ எனும் தேசிய செயல் திட்டத்தை பிரதமர் நரேந் திர மோடி தொடங்கி வைத்தார்.

நாட்டில் அமையவுள்ள அடிப் படை கட்டமைப்பு வசதி திட்டங் களை வேகமாக நிறைவேற்று வதற்கும், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்து நிறைவேற்று வதற்கும் ‘கதி சக்தி’ என்ற தேசிய செயல் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி பிரகதி மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப் பட்டுள்ள புதிய கண்காட்சி வளாகத்தையும் திறந்துவைத்து பார்வையிட்டார்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் 75-வது சுதந்திர தினத் தில் உரையாற்றியபோது, பொரு ளாதார உள்கட்டமைப்புக்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் ‘கதி சக்தி திட்டம்’ தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். அதன் படி, தற்போது அந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

‘கதி சக்தி’ மாஸ்டர் திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதற்கு பெரிதும் உதவும். அனைத்து துறைகளையும் ஒரே அமைப்பின்கீழ் இணைப்பதன் மூலம் திட்டங்களை செயல்படுத்து வதில் அதிக சக்தியையும் வேகத் தையும் வழங்குவதை இது நோக்க மாக கொண்டுள்ளது. பல்வேறு துறைகள் மற்றும் மாநில அரசு களின் உள்கட்டமைப்பு திட்டங் கள் பொதுவான பார்வையுடன் வடி வமைக்கப்பட்டு செயல்படுத்தப் படும்.

அரசின் அனைத்து செயல் பாடுகளையும் ஒன்றிணைப்பது மட்டுமின்றி, பல்வேறு போக்கு வரத்து முறைகளை ஒருங்கிணைக் கவும் இத்திட்டம் உதவும். தரமான உள்கட்டமைப்பு என்பது நாட்டின் நிலையான வளர்ச்சிக்கான ஒரு வழியாகும்.

கதி சக்தி திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றமடையச் செய்யும். வேலைவாய்ப்புகளையும் உரு வாக்கும். இத்திட்டம் செயல்படுத் தப்படுவதன் மூலம் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கப் படும். விநியோகத்துக்கான நேரம் குறைவதுடன், சரக்குகளை கையாள்வதற்கான செலவும் குறையும்.

தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை. இப் போது அதை முழுமையான முறை யில் உருவாக்க அரசு தீர்மானித் துள்ளது. அதற்காகவே இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள் ளோம். இந்தியாவில் மாநிலங் களுக்கு இடையேயான முதல் இயற்கை எரிவாயு குழாய் அமைக் கும் பணி 1987-ல் தொடங்கப்பட்டது. அதற்கு பிறகு 2014 வரை 27 ஆண்டுகளில் நாட்டில் 15 ஆயிரம் கி.மீ. மட்டுமே இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட்டது. ஆனால், இன்று நாடு முழுவதும் 16 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் கி.மீ. ரயில் பாதை மின்மயமாக மாற்றப்பட்டுள்ளது. 24 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை பணிகள் 7 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளன.

2015-ல் வெறும் 250 கி.மீ. மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது இதை 700 கி.மீ. என்ற அளவுக்கு உயர்த்தியுள்ளோம். மேலும் 1,000 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு திட்டங்கள் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை நாங்கள் அமைக்கிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x