Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் - ஊரக ஊராட்சித் தேர்தல் வெற்றி விவரங்கள் :

கள்ளக்குறிச்சி/விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலில் அனைத்திலும் திமுக வெற்றி பெற்றது.விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 27 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 180 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 412 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 3,162 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 3,773 பதவியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்மொத்த இடங்கள்திமுகஅதிமுககோலியனூர்20133காங்கிரஸ் 1மற்றவை 3காணை 23171காங்கிரஸ் 1மற்றவை 4விக்கிரவாண்டி21163மற்றவை 2கண்டமங்கலம் 25185காங்கிரஸ் 1மற்றவை 1செஞ்சி 24164மற்றவை 4வானூர் 271011பாமக-2சுயேச்சை 2விசிக 2 ஒலக்கூர்1673மற்றவை 6திருவெண்ணெய்நல்லூர் 22171இந்திய கம்யூனிஸ்ட் 1மற்றவை 3முகையூர்23166பாமக 1மயிலம்21161மற்றவை 4மரக்காணம் 26183பாமக 2சுயேச்சை 3வல்லம்21152மற்றவை 4மேல்மலையனூர்24193மற்றவை 2 கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்மொத்த இடங்கள்திமுகஅதிமுககள்ளக்குறிச்சி23182சுயேச்சை 3ரிஷிவந்தியம்25213சுயேச்சை 1உளுந்தூர்பேட்டை21151சுயேச்சை 5கல்வராயன்மலை77--சங்கராபுரம்24211சிபிஎம் 1சுயேச்சை 1சின்னசேலம்21173காங்கிரஸ் 1தியாகதுருகம்16142திருக்கோவிலூர்23202சுயேச்சை 1திருநாவலூர்20132சிபிஎம் 1சுயேச்சை 4 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 29 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 453 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என மொத்தம் 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய பதவிகளுக்கு போட்டியா ளர்களாக 10,715 பேர் களம் கண்டனர்.

இதையடுத்து 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளில் 2 இடங்களில் திமுகவைச் சேர்ந்த 2 மாவட்டக் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இந்நிலையில், போட்டியிட்ட 17 இடங்களையும் திமுக கைப்பற்றியது.

அதேபோன்று 9 ஊராட்சி ஒன்றியங்களில் 180 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு திமுகவைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 177 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 143 இடங்களில் திமுகவும், 16 இடங்களில் அதிமுகவும், 1 இடத்தில் காங்கிரஸ், 2 இடங்களில் சிபிஎம், 15 இடங்களில் சுயேச்சை களும் வெற்றி பெற்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 688 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 5,088 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 6,097 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 22 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 369 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மற்ற 5,706 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் 27 இடங்களில் திமுக வேட்பாளர்களும், ஒரு இடத்தில் அதிமுக வேட்பாளரும் வெற்றிபெற்றனர். 13 ஊராட்சி ஒன்றியங்களில் 293 ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் திமுக 198,அதிமுக 46,பாமக 5,காங்கிரஸ் 3, விசிக 2, இந்திய கம்யூனிஸ்ட் 1 , மற்றவை 38 இடங்களில் வெற்றி பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x