Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழுவின் : முதல் தலைவர் பதவியை கைப்பற்றுகிறது திமுக :

தென்காசி: தென்காசியில் மாவட்ட ஊராட்சிக் குழுவின் முதல் தலைவர் பதவியை திமுக கைப்பற்றுகிறது.

தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழுவில் 14 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 10 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 3 வார்டுகளிலும், மதிமுக ஒரு வார்டிலும் போட்டியிட்டன. அதிமுக 12 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாஜக 2 வார்டுகளிலும் போட்டியிட்டன.

இதில், திமுக கூட்டணி அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது. புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றுகிறது. வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:

வார்டு 1- சந்திரலீலா (திமுக), 2- மாரிமுத்து (திமுக), 3- தேவி (மதிமுக), 4- சுதா (திமுக), 5- ராஜா தலைவர் (திமுக), 6- கனிமொழி (திமுக), 7- பூங்கொடி (திமுக), 8- உதயகிருஷ்ணன் (காங்கிரஸ்), 9- சாக்ரடீஸ் (திமுக), 10- முத்துலெட்சுமி (திமுக), 11- சுப்பிரமணியன் (காங்கிரஸ்), 12- தமிழ்ச்செல்வி (திமுக), 13- சுதா (காங்கிரஸ்), 14- மைதீன்பீவி (திமுக).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x