Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM

மாவோயிஸ்ட் - தீவிரவாதிகள் இடையே தொடர்பு - தமிழகம், கேரளா, பெங்களூருவில் 23 இடங்களில் என்ஐஏ சோதனை :

மாவோயிஸ்ட்களுக்கும், தீவிரவாதிகளுக் கும் இடையே இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரித்து வரும் என்ஐஏ அதி காரிகள், தமிழகம், கேரளா, பெங்களூருவில் 23 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

கேரள மாநில வனப்பகுதிகளில் ஏராள மான மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருந் தனர். அவர்களில் பலர் தமிழகத்தைச் சேர்ந் தவர்கள். கேரளாவின் தீவிரவாத தடுப்புப் பிரிவான ‘தண்டர்போல்ட்’ போலீஸார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட்கள் வேல்முருகன், கார்த்திக், மணிவாசகம் ஆகியோர் 2019-20 ஆண்டுகளில் கேரள வனப் பகுதிகளில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து கேரளா மற்றும் தமிழக போலீஸார் இணைந்து வனப்பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

கேரள வனப்பகுதியில் கடந்த ஜூன் மாதம் மாவோயிஸ்ட்கள் ரகசிய கூட்டம் நடத்தினர். தமிழகத்தைச் சேர்ந்த பல மாவோயிஸ்ட்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், மாநில போலீஸாருடன் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இணைந்து கேரள வனப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். மாவோயிஸ்ட்களுக்கும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து இந்த விவகாரத்தை என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்தனர்.

தமிழகத்தில் 12 இடங்கள்

இந்நிலையில், மாவோயிஸ்ட் அமைப் பைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த வாரம் கேரளாவில் கைது செய்தனர். காளிதாஸின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள பொன்னையாபுரம் கிராமம் ஆகும். 2011-ம் ஆண்டு அப்பகுதியில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து காளிதாஸ், அவரது சகோதரர் சிங்காரம் இருவரும் சொந்த ஊரை விட்டு வெளியேறினர். இதில் காளிதாஸ் கேரளாவுக்கும், சிங்காரம் சிவகங்கை மாவட்டம் அண்ணாமலை நகருக்கும் இடம் பெயர்ந்தனர்.

காளிதாஸிடம் நடத்தப்பட்ட விசார ணையைத் தொடர்ந்து தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

காளிதாஸின் சகோதரரான சிங்காரம் வீட்டில், கொச்சியைச் சேர்ந்த என்ஐஏ ஆய்வாளர் உன்னிகிருஷ்ணன் தலைமை யிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரள போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட கார்த்திக்கின் வீடு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்லூரில் உள்ளது. அந்த வீட்டில் என்ஐஏ ஆய்வாளர் சிபின் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கேரள போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்ட மணிவாசகத்தின் சேலம் தீவட்டிப்பட்டி ராமமூர்த்தி நகர் வீட்டிலும், வேல்முருகனின் தேனி பெரியகுளம் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மணி வாசகத்தின் குடும்பத்தினரிடமும் விசா ரணை நடத்தினர். வேல்முருகன் ஈழத்திலும் பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று முருகமலை வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி வெளியே வந்த ஈஸ்வரன் என்பவரது இல்லத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்ததாக கோவை புலியகுளம் ஏரிமேட் டைச் சேர்ந்த தினேஷ் (36) என்ற பல் மருத்துவரை கடந்த பிப்ரவரியில் கேரள மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரது நண்பரான சுங்கம் காமராஜர் வீதியைச் சேர்ந்த டேனிஷ் (32) என்பவரும் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அருகேயுள்ள அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் மாவோயிஸ்ட் ஆதரவாளராக செயல்பட்டது தெரியவந்தது. அவர் தலைமறைவாகி விட்டார். தினேஷ், டேனிஷ், சந்தோஷ் ஆகியோரின் வீடு களிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் 12 இடங்கள் உட்பட கேரளா, பெங்களூருவில் 23 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x